உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதுரா ரயில் நிலையத்தில், மின்சார ரயில் தடம் புரண்டு நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ரயில் விபத்து ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது. கடந்த ஜூன் மாதம், ஒடிசாவில் 3 ரயில் ஒன்றோடு ஒன்று மோதி, 293 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து, மதுரையில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். பின்னர் உத்யான் எக்ஸ்பிரஸ், ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களில் தீ விபத்துகள் ஏற்பட்டது. ஆனால் யாரும் பாலியாகவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று இரவு 10.49 மணியளவில் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மதுராவில் இரயில் நிலையத்திற்கு ஷாகுர்பஸ்தி என்ற இடத்திலிருந்து பயணிகளுடன் வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிவிட்டு காலியான பெட்டியுடன் புறப்பட்ட அந்த ரயில் திடீரென தடம் புரண்டு நடைமேடையில் ஏறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே அதிகாரிகள் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.